பிகில் முதல் நாள் வசூல்!


தளபதியின் பிகில் படம் நேற்று மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே விற்று தீர்ந்துவிட்டன. மேலும் ஸ்பெஷல் காட்சிக்கும் அரசு கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் பிகில் 1.79 கோடி ருபாய் முதல் நாளில் வசூலித்துள்ளது. இது தான் இந்த வருடத்தில் டாப் வசூல். இது நேர்கொண்ட பார்வை படத்தை விட 24 லட்சம் ரூபாய் அதிகம்.
ஆல் டைம் வசூலில் பிகில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஷங்கரின் 2.0 மற்றும் விஜய்யின் முந்தைய படமான சர்க்கார் பிடித்துள்ளன.
அதன் வசூல் விவரங்கள்:
2.0 - 2.64 Cr
சர்கார் - 2.41 Cr
பிகில்⁠ ⁠ - 1.79 Cr

Previous Post Next Post