தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து புதிய புகைப்படம் வெளியிட்ட நடிகர் சஞ்சீவ்

விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது. விஜய் இருக்கும் ஹோட்டலில் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலை மோதுகிறது.
கர்நாடகாவில் சிவமோகா என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் தனது நண்பர்களுடன் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அதில் ஷாந்தனு, நாகேந்திர பிரசாத், பிரேம், சஞ்சீவ்  உள்ளனர். எனவே அந்தப் புகைப்படத்தில் உள்ள அனைவருக்கும் படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கும் என நம்பப்படுகிறது.




Previous Post Next Post