தியேட்டர் தெறிக்க... - தளபதி விஜய்யின் பிகில் படக்குழு வெளியிட்ட வெறித்தன அப்டேட்!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.





இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி இந்துஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளது. அதில் பிகில் படத்தின் வியாபாரம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் 90 சதவிகித பெரிய திரையரங்குகளில் இந்த ஸ்போர்ட் டிராமா பொழுதுபோக்கு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. தனியாக வெளியாகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post