லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர்.
இப்படம் சென்ற ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவர இருந்தது. ஆனால், கொரோனவால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.
இதனையடுத்து இப்படம் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அன்று வெளிவரும் என சில தகவல்கள் அண்மையில் கசிந்திருந்தது.
ஆனால், தற்போது இப்படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவராது என்று தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொரோனா பிரச்சனை முழுமையாக தீரும் வரை திரையரங்குகள் திறக்கப்படாது அதுவும் இந்த வருடத்தின் இறுதி வரை செல்லும் எனவும் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
இதனால் இப்படம் இந்த வருடம் வெளிவருமா என ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய குழப்பம் மற்றும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
