விஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! போட்டி ஆரம்பம்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிகில் என படத்தின் டைட்டிலையும், 3 போஸ்டர்களையும் வெளியிட்டார்கள்.
மெர்சல், சர்கார் படங்களை போல தீபாவளி பண்டிகை ரிலீஸ் ஆக பிகில் படமும் வெளியிடப்படுகிறது. முக்கிய பண்டிகள் என்றாலே பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தான் என்றே ஆகிவிட்டது.
இந்நிலையில் இவ்வருடம் பிகில் படத்துடன் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தை வெளியிடுகிறார்களாம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோரு படத்துள்ளனர்.
இப்படத்தை வாலு, ஸ்கெட்ச் படங்களின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.
Previous Post Next Post